நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்தியா கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
பாஜகவில் கூட்டணி கட்சிகளை சேர்த்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆந்திராவில் உள்ள மொத்த தொகுதிகள் 25ல் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதுபோல பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாரின் கட்சி தனியாக 14 இடங்களை கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் நிதிஷ்குமார் நாங்கள் பாஜக கூட்டணியில் தான் நீடிப்போம் என கூறி விட்டார். சந்திரபாபு நாயுடுவிடம் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் போனில் தொடர்பு கொண்டு ஆதரவை கேட்டார். ஆனால் நாயுடுவும் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.