திருச்சி என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக கல்லூரியை விட்டு வெளியே சென்று மாயமானவரை துவாக்குடி போலீசார் 20 நாட்களாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அவரது பெற்றோர் மத்திய பிரதேச மாநில முதல்வரை சந்தித்து தனது மகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என கூறி மனு கொடுத்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுஜய்சிதி.என்ற என்ஐடி மாணவி விடுதியில் தங்கி கட்டடக்கலை பொறியியல் படிப்பு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இங்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை கட்டடக்கலை படிக்கவும் விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தலைவலி காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய பாராசிட்டமல் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சுமார் பத்து மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக தனது தாயிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அவரது தாய் உடனடியாக என் ஐடி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தனது மகள்அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாகவும் உடனடியாக அவரைக் காப்பாற்றும் படியும் என் ஐ டி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து என்ஐடி நிர்வாகம் உடனடியாக சுஜய் சிதியை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் என் ஐ டி கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று பிரச்சனைகள் கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்டு வருவது
என ஐடி கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.