திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரி ஆகும்.
இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் தொழிற் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் தனியார் திரைப்படமான
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 2 ப்ரோமோஷன் விழா கல்லூரியின் பொன்விழா கட்டிடத்தில் நடந்தது.
இந்த விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அமர்வதற்கும் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அநாகரிகமாக மாணவர்கள் நடந்து கொண்டனர்.
அதைப் பார்த்து கல்லூரி பொறுப்பாளர் ஒருவர் மாணவர்களை கண்டித்தும் அவர்கள் கேட்கமால் அராஜகமாக நடந்து கொண்டதால் அங்கிருந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அதிரடியாக வெளியேறினார்கள்.
இந்த நிலையில் கல்லூரியில் திரைப்பட நடிகர் நடிகைகள் வருவதால் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்த போலீசாரையும் மாணவர்கள் அவமரியாதை செய்ததோடு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கல்லூரி பாதுகாவலர்களும் அவமதித்தனர்.
மேலும் போலீசாருக்கு போக்குவரத்து விதிகளை மாணவர்கள் சொல்லிக் கொடுப்பது போல் வண்டியை நிறுத்த சொல்லியும் சாலையை வரும் வாகனத்தை மறிக்க சொல்லியும் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு தெரியும் எங்கள் வேலையை நீங்கள் வந்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என போலீசாரம் தெரிவித்தது என இதனால் பரபரப்பு ஏற்பட்டது,
எந்த நிலையில் இந்த திரைப்பட நடிகர்கள் நடிகைகள் வருவதால் துவாக்குடி காவல் நிலையத்திலில் உள்ள அனைத்து காவலர்களும் பாதுகாப்பு பணிக்கு வந்து விட்டதால் துவாக்குடி காவல் நிலைய இன்பக்டரை வழக்கு சம்பந்தமாக சந்திக்க வந்த ஒருவர் உள்ளே செல்ல கல்லூரி நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணிகளில் இருந்த கல்லூரி பாதுகாவலர்கள் (செக்குருட்டிகள்) அனுமதிக்காததை தொடர்ந்துஅவர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் தொலைபேசியதை தொடர்ந்து பேசியதோடு அவர் உள்ளே வருவதற்கு அவரை அனுமதிக்குமாறு தொலைபேசியில் செக்யூரிட்டியிடம் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
ஆனால் கல்லூரி செக்யூரிட்டிகள் அவரை அனுமதிக்காமல் சட்டையை கோர்த்து பிடித்து பாதுகாவலர்கள் சேர்ந்து வெளியே தள்ளிஅநாகரிகமாக நடந்து கொண்டனர்.
இப்படி அநாகரிகமாக கல்லூரி மாணவர்களும் பாதுகாவலர்களும் நடந்து கொண்டதோடு நடிகர் நடிகைகளை பார்க்க வந்த பொதுமக்களே அனுமதிக்காமல் அவர்களிடம் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அனுமதித்தனர்.
மத்திய அரசு கல்லூரியில் ஒரு தனியார் பட விழாவை நடத்துவதே மிகவும் தவறு.
கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் முக்கியம் அதுவே தெரியாத இவர்கள் எப்படி நாளை நம் நாட்டை நேசிப்பார்கள் பொருளாதார முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார்கள் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.