Skip to content

நீலகிரிக்கு வர வேண்டாம்… சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பொழிந்து வருகிறது. சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகன மழை பொழியும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 30 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு இன்று நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை பெரும்பாலும் தவிர்க்குமாறு கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!