கரூர் அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயப்பட்டறை இயங்கி வருகிறது இங்கு நூல்கள் சாயம் ஏற்றப்பட்டு வீட்டு உபயோக ஜவுளியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்று சுமார் மாலை 6:00 மணி அளவில் இந்த சாயப்பட்டறை பாய்லர் இயங்கும் பகுதியில், பாய்லரில் எரிபோருளாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக ஆலையில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாய்லர் உள்ள பகுதி மற்றும் அதன் அருகில் அதன் எரிபொருள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.
தகவல் அறிந்த சென்ற செய்தியாளர்களை ஆலை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்தும் எந்த தகவலையும் அளிக்க ஆலை நிர்வாகம் மறுத்தது.