கோவை சிறுவாணி சாலை பச்சாபாளையம் பகுதியில் வருவாய் துறை சார்பில் வருவாய் துறை ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை இந்த பயிற்சியானது நடைபெற உள்ளது. நில அளவியல் மற்றும் நிலவரி திட்ட சிறப்பு பயிற்சி, இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வருவாய்த்துறை
ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவர். இந்த சிறப்பு பயிற்சியில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 54 இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். வருவாய்த்துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணா தலைமையில் இப்பயிற்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.