மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. வெளியிட்டு, சாலைகளில் சுற்றித் திரிகின்றன இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. சாலை ஓரங்களில் நின்றிருக்கும் மாடுகள் திடீரென சாலையில் செல்வோரை முட்டுவது போல வருவதால் அசம்பாவிதம் ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரங்களில் சாலைகளில் திரியும் மாடுகளை கால்நடை பட்டிகளில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.