மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
போலி ஆவணங்கள் அளித்து பாஸ்போர்ட் வாங்கிய வழக்கு, ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.