திருச்சி பீமநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்பட 60 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி பீமநகரிலும் இந்த சோதனை நடக்கிறது. பீமநகர் கோல்டன் கேசில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷேக் தாவூது என்பவர் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷேக் தாவூது இதற்கு முன் கே.கே. நகரில் குடியிருந்து வந்தார். சமீபத்தில் தான் இங்கு குடிவந்து உள்ளார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருகிறது என கூறப்படுகிறது.