திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 க்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதுவரை இல்லாத அளவிற்கு என்.ஜ.ஏ அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தி லேப்டாப்,மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்று சோதனை நிறைவுபெறும்போது சோதனைக்கான காரணம், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சின் என்ஐஏ எஸ்.பி. தர்மராஜ் பேட்டி அளித்தார்.. தற்போது கூடுதலாக விசாரணை மேற்கொள்ள வருகை தந்துள்ளோம். கைது செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதற்காக, எவ்வித வாரன்ட்டும், எப்ஐஆரும் தேவையில்லை. விசாரணைக்காக மட்டுமே வந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய சிறை சிறப்பு முகாமில் தான், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டினர் முருகன், ராபர்ட் பயாஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.