சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கவர்னர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையின் இருபுறமும் டேப் மூலமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். சுமார் 1.30 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிறைவு செய்தனர். கவர்னர் மாளிகையில் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக ஆயுதப்படை காவலர் சில்வாணுவை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.
கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு
- by Authour