தடை செய்யப்பட்ட ‘ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான
நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள குடியிருப்பு, தாம்பரம் அடுத்தமுடிச்சூர் இபி காலனி பகுதியில் உள்ள கபீர் அகமது வீடு, ஈரோடுபெரியார் நகர் அடுத்த கருப்பண்ணசாமி கோயில் வீதியில் உள்ள மெக்கானிக் முகமது இசாக் வீடு, ஈரோடு பூந்துறை ரோடு அசோக் நகர் 6-வது வீதியில் உள்ள சர்புதீன்வீடு, தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது வீடு, தஞ்சாவூர் அடுத்த மானாங்கோரையில் உள்ளஷேக் அலாவுதீன் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்தமண்டையூர் வடகாட்டில் ரபிபுல்லா என்பவரது பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஜமால்முகமது என்பவரது வீட்டில்தங்கியிருந்த தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தஅப்துல் ரகுமானிடம் அதிகாரிகள்விசாரணை நடத்தினர். பின்னர், அவரை சாலியமங்கலம் அழைத்துசென்று அவரது வீடு, முஜிபுர் ரகுமான் என்பவரது வீடுகளில் சோதனைநடத்தினர். பின்னர், அப்துல் ரகுமான்(26), முஜிபுர் ரகுமான்(45) ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை அழைத்து சென்றனர். இந்த சோதனையின் போது என்ஐஏ அதிகாரிகள் சில பென்டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.