வட மாநிலங்களை கலக்கி வரும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தற்ேபாது குஜராத் மாநிலம் சபர்மதி சிறையில் உள்ளாா். அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோயும் பிரபல தாதா தான. அவர் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர்சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.