விக்கிரவாண்டியில் நேற்று நடிகர் விஜய் கட்சி மாநாடு நடந்தது. இதில் நடிகர் விஜய் பேசிய பேச்சு குறித்து நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.
அதன்படி, அவர் அந்த பதிவில், ‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணணும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.