மருத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற தகுதி தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் தான் அவுஸ் சர்ஜனாக பணியாற்ற முடியும். இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் நெக்ஸ்ட் தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய தேசிய மருத்துவ ஆணையம் இன்று அறிவித்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அதில் கூறப்பட்டு உள்ளது.