தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. சென்னையில் வழக்கை விட வடகிழக்கு பருவமழை 50 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கத்தைவிட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும், பருவமழை தொடரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி, தேனி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் மாவட்டங்களில் பெய்த கனமழை பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.