தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (14.09.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.