திருப்பூர், பல்லடம் செய்தியாளர் நேசப்பிரபு மர்ம நபர்களால் கொலைவெறி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 12 மணி அளவில் பெரம்பலூர் செய்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த செய்தியாளர் சூரியகுமார் தலைமை வகித்தார். மூத்த செய்தியாளர்கள் குருராஜ் , சிவானந்தம், உள்பட பலர் பேசினர். இதில் தேசத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க
தமிழக அரசு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
திருப்பூர், பல்லடம் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என
கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நியூஸ்7 செய்தியாளர் வசந்த் நன்றியுரை கூறினார்.
———————————
இதனைதொடர்ந்து பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல்
மெத்தனமாக இருந்த காவல்துறை இருந்ததாகவும் அதனைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் பல்வேறு மாவட்டங்களில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட பிரஸ் கிளப் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டித்து செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், செய்தியாளரை கொடூரமாக தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், முன்கூட்டியே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், கடமை தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தியும்,படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நேசபிரபுவுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட செய்தியாளருக்கு அரசு உடனடியாக நிதி உதவி செய்ய வலியுறுத்தி நாகை புதிய பேருந்து நிலையத்தில் நாகை மாவட்ட பத்திரிகையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர் மட்டுமல்லாமல்
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் நாடார், காவிரி கடைமடை விவசாயிகள் சங்கம் தலைவர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா, தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர்.