Skip to content

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று காலை பெற்றோர், உறவினர்கள்  முன்னிலையில்  விமரிசையாக திருமணம் நடந்தது.

தம்பதியினர் மாலையில் தேநீர் அருந்துவதற்காக  அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அங்கு, லிகிதாஸ்ரீ க்கும், நவீனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென வாக்குவாதம் முற்றி  கைகலப்பாக மாறியது. இதனையடுத்து இருவரும் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்டதாக தெரிகிறது. இதைப்பார்த்து  அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ரத்த காயத்தில் சுருண்டு விழுந்த  2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆ அதற்குள்  மணமகள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார்.

நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தகவல் அறிந்து விரைந்து வந்த ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில்   பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்தின் போது அணிந்த மாலை வாடுவதற்குள் மணமகள்  உயிர்போய்விட்டதே என  அந்த பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!