மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில்
கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு குடிமை பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , கூடுதல் ஆட்சியர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஷ்வரி சங்கர் , கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் , செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் .பாஸ்கரன் , ஊராட்சிமன்ற தலைவர் சந்திரமோகன் உள்ளனர்
