இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி..புனேவில் நடைப்பெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றியடைந்தது. 359 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நியூசிலாந்து பவுலர் சான்ட்னர். சொந்த மண்ணில் 12 ஆண்டுகள் கழித்து இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது. கடைசியாக 2012-13ல் இங்கிலாந்திடம் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது.