Skip to content

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் கடந்த வாரத்தில் குடும்பத்தோடு தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று காலை முதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு போலீசார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதே போல் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், கரந்தை கோடியம்மன் கோயில், பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் கும்பகோணத்தில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல்  திருச்சி சமயபுரம்  மாரியம்மன் கோவிலிலும் பல்லாயிரகணக்கான மக்கள்   அம்மனை தரிசித்தனர்.

error: Content is protected !!