திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார். விழாவுக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்., சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், செ. ஸ்டாலின் குமார், நா.தியாகராஜன் எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா, மாவட்ட ஊராட்சி தலைவர் த. ராஜேந்திரன்,திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி நகர
பொறியாளர் பி. சிவபாதம், மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மிளகுபாறையில் மேடான பகுதியில் இதுவரை குடிநீர் சரிவர வராது. மேடான பகுதி என்பதால் லாரி மூலம் வாலம் 2 முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. எனவே அந்த பகுதி மக்கள் கோரிக்கை ஏற்று அங்கு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த தொட்டி இன்று திறக்கப்பட்டதால் மிளகுபாறை மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதன் மூலம் மேடான பகுதி மக்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும்.