இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. தற்போது இந்த அடையாள அட்டையில்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதால், போலி அடையாள அட்டை தயாரிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டையின் முன் பக்கத்தில், வாக்காளரின் புகைப்படமும், அவரது நெகட்டிவ் இமேஜூம் இடம்பெறும்.
பழைய வாக்காளர் அடையாள அட்டையில் ஹாலோ கிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஆனால் புதிய அட்டையில் ஹாலோ கிராம் அட்டைக்குள்ளேயே ஹாலோ கிராம் இடம்பெறும். கியூ. ஆர். கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்துக்கள் இடம்பெறும்.ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடப்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த நவீன அடையாள அட்டை முதலில் வழங்கப்படும்.
பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் புதிய அட்டை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.