இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பல்கலைக்கழங்கள் உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு கல்வி, மருத்துவம், போன்ற துறைகளில் மற்ற மாநிலங்ளுக்கு முன்னோடியாக உள்ளது. சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, அண்ணாமலை பல்கலை, மதுரை காமராஜர், திருச்சி பாரதி தாசன், கோவை பாரதியார், சேலம் பெரியார், தஞ்சை தமிழ்ப்பல்கலை, வேலூர் திருவள்ளுவர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, கொடைக்கானல் அன்னை தெரசா , கல்வியியல் பல்கலை, உடற்கல்வியியல் பல்கலை, மீன்வள பல்கலை, கோவை வேளாண் பல்கலை, மீன்வள பல்கலை, தனியார் பல்கலைக்கழகங்கள் என தமிழ்நாட்டில் 28 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகமும் உள்ளது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக கலைஞர் திகழ்கிறார் என்று அப்போது அவர் கூறினார். தமிழ்நாட்டின் கல்வி உலக அளவில் பாராட்டப்படுவதற்கு வித்திட்டவர் கருணாநிதி என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் காங்கிரஸ், மதிமுக, கம்யூ, பாமக ., மமக, தவாக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.அதன் மீது பேசிய முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.