திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே திமுக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், திருச்சி, மதுரையில் புதிதாக அமைய உள்ள டைடல் பூங்காவிற்கு காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.403 கோடி மதிப்பீட்டி புதிய டைட்டல் பூங்கா அமையவுள்ளது. இதேபோல் மதுரை மாட்டுத்தாவணியில் 5.34 லட்சம் சதுர அடியில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 2 டைடல் பூங்காகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிலையில், இந்த நிகழ்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டீ.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சியில் புதிய டைடல் பூங்கா… காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..
- by Authour
