தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டடம் பழுதடைந்த காரணத்தால், அந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அங்குள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், எம்.எல்.ஏ நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, திமுக ஒன்றியப் பொருளாளர் கணேசன், ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், ஒன்றியப் பொறியாளர் சாமிநாதன், ஒன்றியக் கவுன்சிலர் சுமதி, ஊராட்சி துணைத் தலைவர் இந்திரா காந்தி, பள்ளித் தலைமையாசிரியை விமலா உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். 2021-22 பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 24.10 லட்சம் செலவில் புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி துவக்கி வைத்தார்.