புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
புதுக்கோட்டையில் இருந்து திருக்கோகர்ணம், முத்துடையான்பட்டி, நார்த்தாமலை, குளத்தூர் வழியாக கீரனூருக்கும், புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம், லேணாவிளக்கு, திருமயம், கடியாபட்டி வழியாக ராயவரத்திற்கும்,
புதுக்கோட்டையில் இருந்து மருத்துவக்கல்லூரி, வடவாளம், மூக்கம்பட்டி, மழையூர் வழியாக துவாருக்கும், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக சேலத்திற்கும், அறந்தாங்கியில் இருந்து ரெத்தினக்கோட்டை, வல்லவாரி, சித்தாதிகாடு வழியாக பேராவூரணிக்கும், அறந்தாங்கியில் இருந்து மேலப்பட்டு, நாகுடி, சிங்கவனம், மேலப்பட்டு, நாகுடி, வேதியன்காடு வழியாக காரக்கோட்டைக்கும், அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கும் புதிய பேருந்து வழித்தட சேவைகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.
மொத்தம் 14 புதிய பேருந்து வழித்தட சேவைகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் புதுக்கோட்டையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பயனடைவார்கள்
தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த புதிய பேருந்து சேவைகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லப்பாண்டியன் ,புதுக்கோட்டை வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, மாமன்ற உறுப்பினர் கனகம்மன்பாபு , வீரமணி மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.