கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும். இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை மகாமகத்திற்கு முன்பு போடப் பட்டதாகும். அதன் பின்னர் இந்தச் சாலை குண்டும், குழியுமாவதும், பல முறை பேட்ச் ஒர்க் மட்டுமே கண்டது. இந்தச் சாலை தற்போது புதிதாக போடப் படுகிறது. புதிதாக சாலைப் போட்ட பாபநாசத்தில் சாலை சில இடங்களில் பெயர்ந்து வருகிறது. வழுத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் பேட்ச் ஒர்த் போட்ட சாலையும் சில இடங்களில் பெயர்ந்து விட்டது. தற்போது போடப் படும் சாலையும் தரமாகப் போடப் படுகிறதா, போடப் படுமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. புதிதாக போட்ட சாலையில் ஏற்பட்ட குண்டும், குழியுமான பகுதியில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இனியாவது இந்தச் சாலைப் பணி தரமாக நடைப் பெறுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள். இது குறித்து அவர்கள் கூறுகையில் பெருகி வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு குறிப்பாக பாபநாசத்திலிருந்து அய்யம் பேட்டை வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப் பட வில்லை. தற்போது போடப் பட்ட சாலையும் சில இடங்களில் பெயர்வது, பெயர்ந்த இடங்களில் மீண்டும் போட்ட சாலை பெயர்வது கவலையளிக்கிறது என்றனர்.
Tags:புதிய தார்சாலை