சேலம் உடையாபட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.கடந்த 3ம் தேதி, ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்ததார். அப்போது அந்த பெண்ணின் செல்போனை வாங்கி உறவினர்கள் பார்த்தபோது அதில் நிர்வாண படங்கள், ஆபாச குறுஞ்செய்தி என ஏகப்பட்ட ‘ஏ’ சர்ட்டிபிகேட் படங்களும், தகவல்களும் இருந்தன.
இதுபற்றி புதுப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் நடந்த சம்பவங்களை எல்லாம் பெற்றோரிடம் கூறிவிட்டு , 5ம்தேதி மாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பெற்றோர், அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த நான் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, அவருடன் நெருங்கி பழகும் பல பெண்களின் நிர்வாண படங்களையும் அதில் வைத்திருந்தார். மேலும், அந்த ஆபாச படங்களை தனக்கு தெரிந்த பல ஆண்களிடம் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதனை தட்டிக்கேட்ட என்னை, அவர் அடித்து துன்புறுத்தினார். மேலும், எனது படத்தையும் பலருக்கு அனுப்பி, ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, பகலிலேயே அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள சொல்லி, அடித்து கொடுமைப்படுத்தினார். அதனையும் படமாக எடுத்து வைத்துள்ளார். இதனை பெற்றோரிடம் சொன்னால், அவர்களையும், என்னையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்.
இதையடுத்து மகளிர் போலீசார், அப்பெண்ணின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் உல்லாசமாக இருந்த 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கணவன் தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வந்தநிலையில், நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். மேலும், அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நடராஜன் (42) என்ற தொழிலாளியையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான தமிழ்ச்செல்வனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எனது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தேன். பிறகு அதனை பார்த்து ரசித்திருக்கிறேன். பிறகு தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பி, அவர்களை வரவழைத்து, மனைவியுடன் உல்லாசமாக இருக்கச் செய்தேன். இதற்காக பணம் பெற்றுக்கொண்டேன், என வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான தமிழ்ச்செல்வன், நடராஜனை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த மேலும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.