ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,நாயகனைபிரியாள் ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் முதன்மை திட்டத்தின் கீழ், நாயகனைப்பிரியாள் சன்னதி தெருவில் ரூபாய் 4.78 இலட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். மேலும். மேலமிக்கேல்பட்டி மேலத்தெருவில் ரூபாய் 4.39 இலட்சம் மதிப்பீட்டில் 16 KVA மின்மாற்றி, ஆகிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இந்நிகழ்வில் மின்வாரிய செயற்பொறியாளர் ஐய்யனார், உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ், உதவி பொறியாளர் இளையராஜா, நாயகனைபிரியாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசாராம்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.ஆர்.கார்த்திகேயன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.