சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். கடந்த வாரம் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகர், மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த நிலையில் இன்று விழுப்பும் மாவட்ட திமுக அவைத்தலைவர் பொறுப்பு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.