நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி தனது கட்சி பெயரை அறிவித்து அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார். அந்த கட்சி்பெயரை இன்று காலை 10 மணிக்கு அவர் அறிவிக்கிறார். அவரது நடவடிக்கை திமுகவுக்கு எதிராக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக பின்னணியில் அவர் கட்சி தொடங்குகிறார் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது. நடிகர் விஜய் இப்போது போட்டியில்லை என்று கூறிவிட்டதால், வரும் மக்களவை தேர்தலில் தி்முக ஓட்டுகளை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விஷால் இறக்கப்படுகிறார். அவரது கட்சி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த டிசம்பர் சென்னை வெள்ள பாதிப்பின்போது திமுகவுக்கு எதிராக விஷால் கருத்து வெளியிட்டார். அதற்கு மேயர் பிரியா சூடான பதில் அளித்ததும் பதில் கூறாமல் அமைதியான விஷால் இப்போது அரசியல் கட்சியை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
