சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், எடப்பாடி அதிமுகவை கபளீகரம் செய்யபார்க்கிறார். வேண்டுமானல் தனிக்கட்சி தொடங்கட்டும் என்றார். இதற்க இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓபிஎஸ்சை நாங்கள் தனிப்பட்ட முறையில் நீக்கவில்லை. பொதுக்குழு தான் நீக்கியது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சர் ஆவதை நாங்கள் தடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எப்படி கட்சி கொடியை பயன்படுத்த முடியும். எங்களை தனிக்கட்சி தொடங்க சொல்லும் ஓபிஎஸ், வேண்டுமானால் அவர் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.