டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை இன்று செயல்பட தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு இரு அவை உறுப்பினர்களின் கூட்டு கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி அனைவரையும் கைகுலுக்கி வரவேற்றார்.

பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா, இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கார்கே , மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பேசினர்.
சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மக்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 1.15 மணிக்கும் மாநிலங்களவை அலுவல்கள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை காவலர்கள் புதிய சீருடையில் வந்துள்ளனர். நாளைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது. நாளை முதல் அரசின் மசோதாக்கள் மீதான விவாதமும் பரிசீலனையும் நடைபெற உள்ளன.