நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலா 28.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சிக்கல் பகுதியில் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளிடம், கையூட்டு பெறாமல் ஊழியர்கள் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டுமென பேசினார்.இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
