தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 .45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் , துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சுப்பிரமணியன் அவர்கள், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா அவர்கள், வைரமணி , உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..