தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவியேற்றது. தற்போது அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி மூத்த அமைச்சர்கள் சிலருக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில துறைகள் ஒதுக்கப்படும், எனவே சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதியையும் அமைச்சராக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை மாற்றி அமைப்பு மற்றும் விரிவாக்கம் வரும் 14ம் தேதி இருக்கலாம் என கூறப்படுகிறது.