Skip to content

புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் மூன்றின் பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துக்களில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துக்களையும் புதிதாக திணித்திருப்பதால், மத்திய அரசின் இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமல் அவசர கதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி

வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!