தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் குடிசை மாற்று வாரியயத்தின் கீழ் ரூபாய் 21.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னைியல் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசு, தலைமை செயலாளர் இறையன்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் இருங்களூர் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதிதற்கான நிகழ்ச்சி இருங்களூரில் நடந்தது. இதில் கலெக்டர் பிரதீப் குமார் குத்து விளக்கு ஏற்றி குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு செய்து
ஆணைகளையும், கிரைய பத்திரங்களையும் வழங்கினார்..
இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் இளம் பிரதி, ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் உள்ளிட்ட பொதுமக்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.