கோவை சவுரி பாளையம் பகுதியில் உள்ள ஹட்கோ காலனி பகுதியில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதுபட்டு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்ததால்,ஹட்கோ காலனி, குடியிருப்பு வீடுகளை மறுகட்டுமானம் செய்வது தொடர்பாக பணிகள் துவங்கி உள்ளன.இந்நிலையில்,சௌரிபாளையம் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் பகுதி- 1 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசணை கூட்டம் பாலன் நகர் பகுதியில் நடைபெற்றது..இதில்,ஹட்கோ உரிமையாளர்களின் புதிய அடுக்கு மாடி வீடுகள் கட்டும் திட்டத்தில்,அடிப்படை வசதிகளை பெறுவது தொடர்பாக ஆலோசணை செய்யப்பட்டது..இதில், 528 வீட்டு உரிமையாளர்களும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொரு வகையான வீடுகளுக்கு உள்ள வசதிகள் செய்து தர வேண்டும் மற்றும் கட டுமான தரம் உறுதியாக இருக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.குறிப்பாக கட்டுமானம் ஒப்பந்தம் தொடர்பான டெண்டர் வெளிப்படையாக நடக்க வேண்டும் என தெரிவித்தனர்.இந்த ஆலோசணை கூட்டத்தி்ல் சங்க நிர்வாகிகள் தங்கவேல் கலைச்செல்வம் ஹாட்கோ செந்தில் என்ற ராஜ்குமார், பாண்டியன், ராஜா ராம், கண்ணதாசன், வேணுகோபால்,பால் தியகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.