கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்( 28). இவர் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பெண் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜெகன், சரண்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜெகன் டூவீலரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் ஜெகனை வழிமறித்து சரமாரி வெட்டியும் கழுத்தை அறுத்தும் ஆணவக்கொலை செய்தனர்.
தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி டேம் ரோட்டில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் இந்த கொலை நடந்தது. இதனை பார்த்த மக்கள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
ஆணவக்கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாப்பிள்ளை வீட்டார் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.