Skip to content
Home » புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை ….

தமிழகத்தில் இன்று  ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை  தொட்டுள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.83.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.83,700-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,280 வரை அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25% உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *