புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்தின் கல்விக்கு நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. அத்துடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கல்வி நிதியை தமிழகத்திற்கு ஒதுக்க கோரி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டுக்கு எதிரானது. எனவே தமிழகம் இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி நிதியை ஒதுக்குங்கள் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
கல்வியை அரசியலாக்க வேண்டாம், தேசிய கல்வி கொள்கையில் எந்த இடத்திலும் இன்னொரு மாநிலத்தில் வேறு ஒரு மொழியை திணிப்பது எழவில்லை. குறுகிய கண்ணோட்டத்தில் தேசிய கல்வி கொள்கையை பார்க்க கூடாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து மாணவர்களின் நலன் கருதி முடிெவடுங்கள். தமிழ் கலாசாரத்தை உலக அளவில் எடுத்து செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்விக்கொள்கையுடன் இணைந்தது தான் சமக்ரா சிக்ஷா திட்டம். மாணவர் கல்வி கற்பதை தடுப்பது நியாயமல்ல, தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால் தமிழகம் ரூ.5 ஆயிரம் கோடியை இழக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கைையை அமல்படுத்தி உள்ளன.
பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுதிய கடிதம் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் தர்மேந்திர பிரதான் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் , புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி தரமாட்டோம் என்பதைத்தான், தமிழகம் ரூ.5 ஆயிரம் கோடியை இழக்கும் என உறுதியாக தெரிவித்து உள்ளார்.
,