திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தேசியகொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆடியோ ஆபரேட்டராக பணியாற்றும் செல்வமணி என்பவரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.‘
செல்வமணிக்கு இன்று காலை 8 மணிக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டியவுடன் அவர் மனைவியை அழைத்துக்கொண்டு மணக்கோலத்தில் குடியரசு தின விழா நடைபெற்ற ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து, கலெக்டர் பிரதீப் குமாரிடம் சான்றிதழ் பெற்றார். சான்றிதழ் வழங்கிய கலெக்டர், செல்வமணிக்கு திருமண வாழ்த்தையும் தெரிவித்தார்.