Skip to content
Home » திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

திருச்சி மேற்கு தொகுதியில் புதிய பஸ் வசதி…மேயர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் மூலம் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பகுதி பொதுமக்கள் கூடுதல் பஸ் வசதி பெறும் வகையில் புதிய புறநகரப் பேருந்து இயக்கத்தினை மேயர் அன்பழகன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்புதிய புறநகரப் பேருந்தின் மூலம் கீழ்கண்டுள்ளவாறு பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.

1) சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தில்லைநகர், அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வழியாக மணப்பாறை செல்ல கூடுதல் பேருந்து வசதி பெறுகின்றனர். ராம்ஜிநகர், பிராட்டியூர்.  கருமண்டபம் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,
கி.ஆ.பே. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தில்லைநகர் பகுதிகளுக்கு செல்லவும் புதிதாக நேரடி பேருந்து வசதி பெறுகின்றனர்.

2) மருதாண்டாகுறிச்சி. பிரகாஷ்நகர், அரவானூர், மேலபாண்டமங்கலம், லிங்கநகர் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை கூட்ட நெரிசல் (Peak hours) அதிகமுள்ள நேரங்களில் குறுநடை
இயக்கப்படுவதால் கூடுதலாக பேருந்து வசதி பெறுகின்றனர்.

3) ரெட்டைவாய்க்கால், உய்யகொண்டான் திருமலை, ஸ்ரீனிவாசநகர், குமரன்நகர் போன்ற திருச்சி மேற்கு தொகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குறுநடை இயக்கப்படுவதால் கூடுதலாக பேருந்து வசதி
பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்  K.N.அருண்நேரு , திருச்சி மண்டல பொது மேலாளர் S.சக்திவேல்  , கழக அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *