அரியலூர் மாவட்டத்தில் புதிய புறநகரப் பேருந்து இயக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், நமங்குணம் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் புதிய BS VI புறநகரப் பேருந்து இயக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம், நமங்குணம் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் புதிய BS VI புறநகரப் பேருந்து இயக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி பேருந்து எண்.TN45/N-4489 அரியலூரில் இருந்து புறப்பட்டு புதுவேட்டக்குடி, சொக்கனாதபுரம், நமங்குணம், துங்கபுரம், அகரம்சீகூர், லப்பைக்குடிகாடு வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு விழுப்புரம், பெரம்பலூர் வழியாக திருச்சியை வந்தடையும், இதேபோன்று பேருந்து எண்.TN45/N-4453 ஜெயங்கொண்டம்-இலையூரில் இருந்து புறப்பட்டு உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, பிலாக்குறிச்சி, நாகல்குழி, இலையூர், தேவானூர், ஆண்டிமடம் வழியாக சென்னை கிளாம்பாக்கத்தை சென்றடையும். சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு விருத்தாசலம், ஆண்டிமடம் வழியாக ஜெயங்கொண்டத்தை வந்தடையும் வகையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புறநகரப் பேருந்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், கும்பகோணம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துக்கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.