கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் எங்கள் பகுதியில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் புதிதாக துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பகுதியில் படித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள இளைஞர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.