Skip to content

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60 ஆயிரம் செலவிலும், தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவிலும், ராஜதானி – அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 1 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.97 லட்சத்து 87 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் மற்றும் ரூ.47 லட்சத்து 23 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டிடம், சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.96 லட்சம் செலவில் ஆயுஷ்பிரிவு பல்நோக்குக்கூடம், மருத்துவ உபகரணங்கள், சுகாதார தொகுதி கட்டிடம் என ரூ.2 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் செலவிலான கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.எம்.நாசர், சிவ.வீ.மெய்யநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் விஜயராஜ்குமார், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் சம்பத், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் ஆசியா மரியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
error: Content is protected !!