சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ரூ.24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை ”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும்
புதிதாக வடிவமைக்கப்பட்ட வாரிய வலைதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அப்போது புதிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் முதல்வர் ஸ்டாலின் நட்டு வைத்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் , மேயர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.